சினிமா

இந்தியன் 2 கொடுத்த ஏமாற்றம்… தூசி தட்டப்படும் இந்தியன் 3 கமல் – ஷங்கர் கூட்டணி மீண்டு வருமா?

ஒரு திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டால், அதன் இரண்டாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு தானாகவே பல மடங்கு அதிகரித்துவிடும். ஆனால் முதல் பாகத்திற்குக் கிடைத்த அதே வரவேற்பை அடுத்தடுத்த பாகங்களும் பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. தமிழ் சினிமாவில் அதற்கு சமீபத்திய உதாரணமாக மாறியது இந்தியன் 2 .

கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஊழலுக்கு எதிராகப் போராடும் சேனாபதி கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஷங்கரின் பிரம்மாண்டமான மேக்கிங், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என பல அம்சங்கள் படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்தன.

இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியானபோதே எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டது. கமல்ஹாசன் மீண்டும் சேனாபதியாக நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படம் 2024-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

ஆனால் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை இந்தியன் 2 ஏற்படுத்தவில்லை. குறிப்பாக திரைக்கதை, படத்தின் நீளம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. முதல் பாகத்தை கொண்டாடிய ரசிகர்களிடமிருந்தே இரண்டாவது பாகத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தன.

இதற்கிடையே இந்தியன் 2 படப்பிடிப்பின்போதே அதன் அடுத்த பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தியன் 3 தொடர்பான காட்சிகளும் இந்தியன் 2 இறுதியில் ரசிகர்களுக்குக் காட்டப்பட்டன. இதனால் மூன்றாவது பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது.

இந்த நிலையில், ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள இந்தியன் 3 படத்தை மீண்டும் வெளியீட்டுக்கு தயார்படுத்தும் பணிகளில் லைகா புரொடக்ஷன்ஸ் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்