டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் அமெரிக்க நாட்டிற்கு சாதகமாக பல அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் படிப்பது, வேலை பார்ப்பது, அங்கேயே நிரந்தரமாக தங்குவது போன்ற விஷயங்களை அவர் தடுக்க வேண்டும் என நினைக்கிறார்.
ஏற்கனவே H1 B விசாவுக்கான கட்டணத்தை ஒரு கோடி வரை உயர்த்தினார். சமீபத்தில் அமெரிக்காவில் உயர் கல்வி படித்துவிட்டு அங்கேயே பணிபுரிவதற்கான கட்டணத்தை இந்திய மதிப்பில் ரூ.68 லட்சமாக உயர்த்தினார்.
இந்நிலையில்தான், மைக்ரோசாப்ட், அடோபி, காக்னிசண்ட், இன்போசிஸ், TCS, WIPRO, HCL, கேப்ஜெம்னினி ஆகிய 8 ஐடி நிறுவனங்களை PERM தொழிலாளர் சான்றிதழ் திட்டத்திலிருந்து அமெரிக்கா அரசு இடைநீக்கம் செய்திருக்கிறது..
விசா திட்டங்களை தவறாக பயன்படுத்தி அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நிறுவனங்கள் மூலம் ஊழியர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
PERM திட்டத்தின் படி வெளிநாடுகளில் இருந்து தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை அமெரிக்க முதலாளிகள் நிரந்தரமாக பணியமர்த்த முடியும். அதே நேரம் வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்துவிட்டு அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்ததால் டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை இந்தியாவில் செயல்படும் ஐடி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

