தமிழகத்தில் எதிர்வரும் 2027 ஜனவரி பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தை தொடங்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கு உட்பட்டு வருவாய் ஈட்டும் குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர். இதற்காக ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பயனாளிகளை துல்லியமாக தேர்வு செய்யும் வகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வாடிக்கையாளர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ரேஷன் கார்டுகள் மற்றும் மின்னணு முகமை வாயிலாக தகவல்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். பொங்கல், தமிழ் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை நாட்களுக்கு முன்னதாக, இலவச சிலிண்டருக்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசு நிதியமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

