நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. ரஜினியின் வேட்டையன், கூலி போன்ற படங்கள் ரஜினி ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்தாத நிலையில் ஜெயிலர் 2 படம் அவர்களுக்கு ஃபுல் மீல்ஸாக அமைந்துவிட்டது. அந்த அளவுக்கு படத்தின் கதை, திரைக்கதையை அமைத்து ரஜினிக்கு ஒரு மாஸ் பொழுதுபோக்கு திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில், படம் வெளியான 3 நாட்களில் ஜெயிலர் 2 படம் உலகம் முழுவதும் ரூ.317.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவில் ரூ.169 கோடியும், வெளிநாடுகளில் ரூ.147 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் 500 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

