தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்திய தேனிசைத் தென்றல் தேவா இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். கானா பாடல்கள் மட்டும் இல்லாமல் பல மெலடி பாடல்களையும் தேவா கொடுத்திருக்கிறார்.
தற்போது அவரின் உடல் திரையுலகினரின் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அவரின் உடல் அவரின் சொந்த ஊரான ஆற்காட்டுக்கு கொண்ட செல்லப்பட்டு நாளை மதியம் ஒரு மணி அளவில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது. அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது..
இந்நிலையில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நேரில் வந்து தேவாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘மறக்க முடியாத நினைவுகள் நிறைய இருக்கிறது.. அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை.. அந்த அளவுக்கு சாந்தமான மனிதர்.. எவ்வளவோ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.. ஆனால் அவருடைய கை மிகவும் மென்மையாகவே இருக்கும்.
நான் அவரை சந்திக்கும் போதெல்லாம் அவருடைய விரல்களைத்தான் பார்த்துக் கொண்டே இருப்பேன்.. இசையமைக்கும் போது யாராவது தவறு செய்து விட்டால் மற்ற இசையமைப்பாளர்கள் கோபப்படுவார்கள். ஆனால் தேவாவுக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை’ என அவர் கூறியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் ஏராளமான திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

