இந்திய பிரதமர் நரேந்திர மோடியை குறித்தும், பிரான்ஸ் நாட்டின் தற்போதைய வன்முறை சூழலை இந்தியாவுடனும் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் கருத்து பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“மோடியின் காலாவதி தேதி நெருங்கிவிட்டது” என்று ராகுல் காந்தி குறிப்பிட்ட நிலையில், பிரான்ஸ் நாட்டில் நிலவும் போராட்ட சூழலைப் பார்த்து கைகொட்டி மகிழும் அவர், அதே போன்ற வன்முறைகளை இந்தியாவில் கலகக்காரர்களை பயன்படுத்தி அரங்கேற்ற திட்டமிடுகிறார் என்று அரசியல் விமர்சகர்களும் ஆளும் தரப்பினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வெளிநாடுகளில் நடக்கும் கலவரங்களை போன்ற வன்முறை சூழலை இந்தியாவில் உருவாக்க காங்கிரஸ் கட்சி முற்படுவதாகவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வன்முறை மூலம் வீழ்த்த முயல்வதாகவும் எதிர்ப்பு குரல்கள் வலுத்துள்ளன.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை இந்தியாவில் பிரதிபலிக்க முயல்வதாக கூறப்படும் இந்தக் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகியுள்ளன. பொறுப்புள்ள ஒரு தேசிய தலைவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது கண்டனத்திற்குரியது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

