சினிமா

தூக்கிவிட்டவர்களை கழட்டிவிட்டவர்தான் சிவகார்த்திகேயன் – பிஸ்மி பேட்டி..

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்தான் சிவகார்த்திகேயன். மெரினா என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்ததோடு அவரை முக்கிய நடிகராகவும் மாற்றியது.

அதன்பின் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகனாக சிவகார்த்திகேயன் மாறிவிட்டார். ஒருபக்கம், தனுஷுக்கு பின் தொடர்ந்து இவரும் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி வருகிறார். எனவே விரைவில் சிவகார்த்திகேயனும் அரசியலுக்கு வருவார் என பேச்சு அடிபடுகிறது..

இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் ‘சிவகார்த்திகேயன் எப்போதும் தன்னை வளர்த்து விட்டவர்களை மிதித்து விட்டுதான் செல்வார்.. அவரை உருவாக்கிய பலருக்கும் அவர் எந்த உதவியும் செய்ததில்லை. துவக்கத்தில் அவரை வைத்து படங்களை தயாரித்து அவரை வளர்த்துவிட்ட தாரிப்பாளர்களை இவர் கண்டுகொள்ளவே இல்லை.. மீண்டும் அவர்களின் தயாரிப்பில் ஒரு படம் கூட நடிக்கவே இல்லை.. அதுதான் சிவகார்த்திகேயனின் குணம்.

சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தது கூட தனுஷை பின்பற்றித்தான். தமிழ் சினிமாவில் எந்த நடிகர் பெரிய ஹிட் கொடுத்தாலும் அவரை தன்னுடைய எதிரியாகவே சிவகார்த்திகேயன் நினைப்பார். இணைய கூலிப்படைகளை வைத்து சமூகவலைத்தளங்களில் தன்னைத்தானே புரமோட் செய்து கொள்கிறார்’ என்று அவர் கூறியிருக்கிறார்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்