அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபராக இருப்பவர் எலன் மஸ்க். அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமானவர் இவர். சாட்டிலைட், இன்டர்நெட் சேவை என பல தொழிலில்களிலும் எலன் மஸ்க் முதலீடு செய்திருக்கிறார்.
இவரின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் இன்டர்நெட் சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஒரு பக்கம் ட்விட்டர் என்கிற பெயரில் இந்த சமூகவலைத்தளத்தை எலன் மஸ்க் விலைக்கு வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிவிட்டார்.
இந்நிலையில் எக்சஸ் தளத்தில் லைக் பட்டனை நீண்ட நேரம் அழுத்தினால் ஒரு டாலர் (ரூ.95) பணம் அனுப்பும் புதிய வசதியை எலன் மஸ்க் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வசதி மூலம் கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு டிப் வழங்குவது எளிதாகும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், முதல் கட்டமாக அமெரிக்காவில் இது அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

