ஒன்ராறியோ மாகாணத்தில் ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து பொதுமக்களுக்கும் இலவச காய்ச்சல் மற்றும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மாகாணத்தின் மருந்தகங்கள், பொது சுகாதார நிலையங்கள் மற்றும் முதன்மை சுகாதார மையங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
கனடா முழுவதும் பருவகால காய்ச்சல் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஐந்து சதவீத தொற்று வரம்பை கடந்து தற்போது ஆறு சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, பொது சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மாகாண சுகாதார அமைச்சு இந்த தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும் எழுபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குறிப்பிட்ட தீவிர பாதிப்புள்ள அறுபது முதல் எழுபத்து நான்கு வயதுடையவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆர்.எஸ்.வி தடுப்பூசிகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதோடு, விரைவாக தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

