செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் ஐபிஓ வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், அதன் சந்தை மதிப்பு $2 டிரில்லியன் டாலராக உயர்ந்தால், நிறுவனத்தின் ஏழு இணை நிறுவனர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாட் AI மாடல்களை உருவாக்கிய இந்நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை இந்த ஏழு நிறுவனர்களும் வைத்துள்ளனர்.
ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகி 2021-ல் ஆந்த்ரோபிக் நிறுவனத்தை தொடங்கிய டாரியோ அமோடி, டேனியேலா அமோடி, டாம் பிரவுன் உள்ளிட்ட இந்த ஏழு பேரின் தனிப்பட்ட பங்குகளின் மதிப்பு $27 பில்லியன் முதல் $29 பில்லியன் டாலர் வரை உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் டாம் பிரவுன் மிக அதிக பங்குகளுடன் முன்னணியில் உள்ளார்.
இருப்பினும், இந்நிறுவனத்தின் விரைவான வருவாய் வளர்ச்சிக்கு நிகராக கணினி உள்கட்டமைப்பு செலவுகளும் மிக அதிகமாக இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
2025-ல் நிறுவனத்தின் வருவாய் $4.6 பில்லியனாக உயர்ந்தாலும், அதன் இயல்பு இயக்க இழப்பு $8 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. அமேசான் மற்றும் கூகுள் போன்ற முக்கிய முதலீட்டாளர்களும் இந்த ஐபிஓ மூலம் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

