மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தியாக, அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் மாதம் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டு அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது இந்த புதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முடிவின் மூலம், தற்போது அமலில் உள்ள 60 சதவீத அகவிலைப்படியானது 63 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2026 முதல் நிலுவையுடன் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்திற்கு முன்னதாக மத்திய அரசு எடுத்துள்ள இந்த அறிவிப்பின் மூலம், சுமார் 1.16 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நேரடியாக பயனடைவார்கள்.
வழக்கமாக, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் ஊழியர்களின் நிதிச்சுமையை குறைக்கவும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை மத்திய அமைச்சரவை மாற்றியமைத்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

