சினிமா

ஜனநாயகன்’ தளபதி விஜய்க்கு முடிவு கிடையாது, இதுதான் ஆரம்பம்: இயக்குனர் எச் வினோத்

மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் அ. வினோத் படத்தின் கதை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். படம் ரீமேக்கா அல்லது நேரடி கதையா என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு, “இது 100 சதவீதம் அசல் தளபதி படம்” என்று உறுதி அளித்தார்.

படம் முழுக்க ரசிகர்கள் ஆடிப் பாடி கொண்டாடுவதற்கான தருணங்கள் அதிகம் இருப்பதாகவும், அதே சமயம் படத்தின் கருப்பொருள் ஆழமாக சிந்திக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் குறித்து பேசுகையில், “கடைசி 15 நிமிடங்களில் ஒரு ‘ஃபேர்வெல்’ காட்சி இருக்கிறது. ஆனால், அது யாரையும் அழ வைக்காது. மாறாக, பெரும் நம்பிக்கையை தரும் விதமாகவே அமையும்” என்றார்.

தளபதி விஜய்க்கு இது சினிமா வாழ்க்கையின் முடிவு அல்ல, இதுதான் அவரது புதிய பயணத்தின் உண்மையான ஆரம்பம் என்று வினோத் முடித்தது, அரங்கத்தையே அதிர செய்தது. விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாக குறிப்பிட்ட இந்த பேச்சு, ‘ஜனநாயகன்’ ஒரு திரைப்படமாக மட்டுமின்றி, ஒரு மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்