விளையாட்டு

மனைவி அனுஷ்காவுடன் புத்தாண்டை கொண்டாடிய விராத் கோஹ்லி.. நெகிழ்ச்சியான பதிவு..!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, 2026-ஆம் புத்தாண்டை தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். புத்தாண்டை கொண்டாடும் விதமாக அனுஷ்காவுடன் இருக்கும் கலகலப்பான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள கோலி, தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கோலி ஸ்பைடர்மேன் பாணியிலான முகமூடியை அணிந்து குறும்புத்தனமாக போஸ் கொடுத்துள்ளார். “என் வாழ்வின் ஒளியுடன் 2026-க்குள் நுழைகிறேன்” என்று அனுஷ்காவை வர்ணித்து அவர் பதிவிட்டுள்ள வாசகம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தற்போது விராட் கோலி உள்நாட்டு கிரிக்கெட்டான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த லிஸ்ட்-ஏ தொடரில் களமிறங்கியுள்ள கோலி, இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் 131 மற்றும் 77 ரன்கள் குவித்து அபாரமான ஃபார்மில் உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ஜனவரி 8-ஆம் தேதி வதோதராவில் இந்திய அணியுடன் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்