காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்பது போல் இன்றைய சூழ் நிலை மாறி விட்டது. அதனால் காதல் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு விஷயம்தான். அதை கடக்காமல் நம்மால் கடந்து வரவே முடியாது. குறிப்பாக சினிமாத்துறையில் காதல் என்பது அனைவருமே உணரக்கூடிய விஷயம்தான். இன்று எத்தனையோ பிரபலங்கள் காதல் கல்யாணம்தான் செய்திருக்கின்றனர்.
அதில் சில பேருடைய வாழ்க்கை வெற்றியாகியிருக்கிறது. சில பேருடைய வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. 80கள் காலகட்டத்தில் எந்தெந்த நடிகர்கள் காதல் வயப்பட்டார்கள் என்பது பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். முதலில் ரஜினி. ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடிக்கும் போது ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் லதா. அப்போது ரஜினியின் ஸ்டைல், நடிப்பு என எல்லாமே லதாவுக்கு பிடித்திருந்ததாம்.
அந்தப் படத்தில் பணியாற்றும் போதே ரஜினியும் லதாவும் நெருக்கமாகத்தான் பழகினார்களாம். காதலிக்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இவர்கள் காதல் கை கூடவில்லை. அதனால்தான் லதா என்ற பெயரிலேயே லதா ரஜினிகாந்தை திருமணம் செய்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். அடுத்ததாக கமல். வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
அவருக்கு அடுத்தபடியாக சரிகா என்ற ஃபேஷன் டிஸைனரை காதலித்து திருமணம் செய்தார். அதுவும் நிலைக்கவில்லை. இப்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் கமல். கமல் மாதிரியே காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். அனைத்து பெண்களுக்கும் பிடித்தமான நடிகராக கார்த்திக் வலம் வந்தார். இவர் ராகினியை காதலித்து திருமணம் செய்து இப்போதுவரை இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
அடுத்ததாக டி. ராஜேந்திரன் வாழ்க்கையிலும் காதல் விளையாடியிருக்கிறது. உஷா என்ற பெண்ணை காதலிக்க அந்த பெண் இவருக்கு கிடைக்கவில்லை என்பதால்தான் அதே பெயரிலேயே இன்று மனைவியாக இருக்கும் உஷாவை திருமணம் செய்திருக்கிறார் டி.ராஜேந்திரன். அடுத்து முரளி. இவருக்கும் காதல் திருமணம்தான். இவர்கள் திருமணத்தை முரளியின் அம்மாதான் முன்னின்று நடத்தி வைத்தார்.
அடுத்ததாக ராமராஜன். நளினியை காதலித்து திருமணம் செய்த ராமராஜன் இப்போது நளினியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர்கள் திருமணத்தை எம்ஜிஆர்தான் முன்னின்று நடத்தினார்.

