விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

2026-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் களத்தில் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி வெடித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு பிரிவான ஜெமினி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் மூன்று ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுமார் ரூ.270 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், ஐபிஎல் வரலாற்றில் ஏஐ தளங்களுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய வர்த்தக டீல் ஆகும்.

ஏற்கனவே, மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஸ்பான்சராக மைக்ரோசாஃப்ட் ஆதரவு பெற்ற ChatGPT ரூ.16 கோடிக்கு 2 ஆண்டு ஒப்பந்தம் இருக்கும் நிலையில், தற்போது ஆண்கள் ஐபிஎல் தொடருக்குள் ஜெமினி நுழைந்துள்ளது. இது தொழில்நுட்ப உலகில் முன்னணியில் உள்ள இரண்டு ஏஐ ஜாம்பவான்களுக்கு இடையே கிரிக்கெட் மைதானத்தில் ஒரு புதிய ‘டெக் போரை’ உருவாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, பிசிசிஐ இத்தகைய புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனங்களை வரவேற்றுள்ளது.

மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள ஐபிஎல் 2026-இல், மைதானத்தை சுற்றியுள்ள விளம்பர பலகைகள் முதல் டிஜிட்டல் திரைகள் வரை இனி ‘ஜெமினி’ மயம் தான்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்