சினிமா

5 நிமிடங்களில் விற்று தீர்ந்த மங்காத்தா டிக்கெட்.. மறுரிலீஸில் வசூல் சாதனை..!

அஜித் குமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லான ‘மங்காத்தா’ வரும் ஜனவரி 23-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2011-இல் வெளியான இந்தப் படம், அஜித்தின் 50-ஆவது படமாகவும், ‘விநாயக் மகாதேவ்’ என்ற அந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்காகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு கல்ட் கிளாசிக் ஆகும். தற்போது 2026-இல் 4K தரத்தில் வெளியாகும் இந்த படத்திற்கு தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னையின் காசி தியேட்டர் போன்ற முக்கிய திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே முதல் நாள் காட்சிகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் முதல் நாளின் மூன்று காட்சிகளும் ஏற்கனவே ‘ஹவுஸ்புல்’ ஆகிவிட்டதால், வார இறுதி நாட்களுக்கான முன்பதிவு இப்போதே களைகட்டியுள்ளது.

ராம் சினிமாஸ் போன்ற மற்ற திரையரங்குகளும் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் காட்சிகளை சேர்த்து வருகின்றன.

மங்காத்தா படத்தின் மாஸான ஓப்பனிங் வசூலானது மறுவெளியீடு செய்யப்படும் படங்களில் புதிய சாதனையைப் படைக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்