பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் இறுதி 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் எல்லோரும் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 12 பேர் இறந்ததை அரசு உறுதி செய்திருக்கிறது.இது ஒரு தற்கொலை தாக்குதல் என சொல்லப்படுகிறது..
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடனேயே காவல்துறை மற்றும் ராணுவப்படை அந்த இடத்திற்கு வந்து முழுப்பகுதியையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தது. இஸ்லாமாபாத்தின் கிராண்ட் மசூதி என சொல்லப்படும் காசர்-இ-காதிஜதுல் குப்ரா பகுதியில்தான் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியிருக்கிறது. அதில், பயத்தில் மக்கள் பயந்தோடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
தற்கொலை தாக்குதலை நடத்திய நபர் ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்திருக்கிறது.

