விளையாட்டு

15 பவுண்டரி.. 15 சிக்சர்ஸ்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவம்ஷி.. 300ஐ தாண்டிய ஸ்கோர்..!

ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில், வெறும் 55 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு அவர் கொண்டு சென்றார். தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் சீக்கிரம் ஆட்டமிழந்தாலும், ஆயுஷ் மத்ரேவின் அரைசதமும் வைபவ்-ன் அதிரடியும் இங்கிலாந்து பந்துவீச்சை நிலைகுலைய செய்தது. வைபவ் மொத்தம் 175 ரன்கள் அடித்த நிலையில் அதில் 15 பவுண்டரி, 15 சிக்சர்ஸ் அடங்கும்.

இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக உள்ளது. ஏற்கனவே ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, தனது 6-வது உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

2022 இறுதிப்போட்டியிலும் இந்தியாவே இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்