டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பெண் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க வந்தவர்கள், பணி செய்ய வந்தவர்களை குறி வைத்தார்.
சரியான விசா இல்லாதவர்களை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தினார். அதில் பல இந்தியர்களும் அடக்கம். ஒருபக்கம் ஈரான் நாட்டின் மீது போரை துவங்கினார். அந்த போர் தற்போது வரை நின்றபாடில்லை. ஒருபக்கம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 100 சதவீத வரியை விதிக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இது தொடர்பான மசோதா விரைவில் அமெரிக்கா பாராளுமன்றத்தில் தாக்கலாகும் என சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்வதற்கு 1,00000 டாலர் (இந்திய மதிப்பில் 95 லட்சம்) கட்டணம் வசூலிக்க டிரம்பின் நிர்வாகம் யோசித்து வருகிறதாம். இந்த கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா? அல்லது அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா? என்பது பற்றி இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

