இந்தியா

50,000 ரூபாய் பிரீமியம் செலுத்தியவருக்கு ஹெல்த் க்ளைம் மறுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

தனது தாயின் மருத்துவ காப்பீட்டிற்காக ஆண்டுக்கு 50,000 ரூபாய் பிரீமியம் செலுத்தி வந்த நபர் ஒருவர், அவசர காலத்தில் க்ளைம் மறுக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவிலுள்ள ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு அலுவலகத்தில் பல மணிநேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாகவும், இறுதியில் க்ளைம் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எங்களிடம் கேட்டா பாலிசி எடுத்தீர்கள்?” என அங்கிருந்த முகவர் அலட்சியமாக பேசியது தமக்கு அதிர்ச்சியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஸ்டார் ஹெல்த் நிறுவனம், மருத்துவ ஆவணங்களில் தகவல்களை மறைத்திருந்தால் விதிமுறைகளின்படி க்ளைம் மறுக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், பிரீமியம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை க்ளைம் வழங்குவதில் நிறுவனங்கள் காட்டுவதில்லை என பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.

பாலிசி எடுக்கும்போது ஏஜெண்டுகள் கொடுக்கும் வாய்மொழி வாக்குறுதிகள், மருத்துவ நெருக்கடியின் போது கைகொடுப்பதில்லை என்பதே பலரின் கவலையாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்