இந்தியா

மத்திய கிழக்கில் சிக்கிய இந்தியர்கள் தரை வழியாக பயணம்.. நாடு திரும்பியவர்களின் திகில் அனுபவம்..!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமீரகத்தில் சிக்கியிருந்த இந்தியர்கள் ஓமனுக்கு 6 மணிநேரம் தரைவழியாக பயணம் செய்து அங்கிருந்து தாயகம் திரும்பி வருகின்றனர்.

துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மஸ்கட் நகருக்கு சென்று, அங்கு வழக்கத்தை விட 5 மடங்கு அதிக விலைக்கு விமான டிக்கெட்டுகளை வாங்கி மும்பை மற்றும் டெல்லிக்கு இந்தியர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.

வான்வெளியில் ஏவுகணைகள் வழிமறிக்கப்படுவதை முதன்முறையாக பார்த்ததாக திரும்பியவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். துபாயில் தரைப்பகுதியில் நிலைமை சீராக இருந்தாலும், வான்வெளி முடக்கத்தால் நிலவும் நிச்சயமற்ற தன்மையே தங்களை வெளியேற தூண்டியதாக அவர்கள் கூறினர்.

ஏர் இந்தியா மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் தற்போது சிறப்பு விமானங்களை இயக்க தொடங்கியுள்ளன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1,117 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, டெல்லி மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்