கடந்த பல தேர்தலாகவே காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணைந்துதான் தமிழகத்தில் தேர்தலை சந்தித்து வருகிறது. அதே நேரம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரசுக்கு திமுக எந்த பங்கும் கொடுப்பதில்லை. ஆனால் இந்த முறை தங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மாணிக்கம் தாகூர் எம்பி மற்றும் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் இதை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, எங்களை பற்றி திமுக பேசினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் என அவர் கூறினார். எனவே திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்கிற நிலை உருவானது. அதேநேரம், காங்கிரஸுடனான கூட்டணியில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ராகுல் காந்தி என்னுடைய சகோதரர் போன்றவர் என்று முதல்வர் முக ஸ்டாலின் பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில்தான் தமிழக அரசியல் நிலவரம், திமுக உடனான கூட்டணி, தொகுதி பங்கீடு, மற்றும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என எழுந்திருக்கும் குரல்கள் என பலவற்றையும் விவாதிக்க டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை தமிழக பாஜக தலைவர் செல்ல பெருந்தகையை அங்கு அழைத்திருக்கிறது. அதை ஏற்று இன்று காலை செல்வ பெருந்தை டெல்லி சென்றிருக்கிறார்.

