இந்தியா

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!

கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த காங்கிரஸ் கூட்டணி இந்த முறை எங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும், 40 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடங்களை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் டிமாண்ட் வைத்திருக்கிறது. ஆனால் இது எதையும் திமுக தலைமை ஏற்கவில்லை. எனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது.

ஒருபக்கம் மாணிக்கம் தாகூர் எம்பி, பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்கள் காங்கிரசுக்கு மரியாதை வேண்டும்.. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இது திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரவீன் சக்ரவர்த்தி மீதும் மாணிக்கம் தாகூர் எம்.பி மீதும் காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ராகுலின் குரலைத்தான் இவர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்கிற இமேஜ் உருவானது.

ஒருபக்கம் மாணிக்கம் தாகூர் எம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.. ஆனால் செய்தியாளிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்ல பெருந்தகை ‘யாராக இருந்தாலும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்.. கூட்டணி பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது என காங்கிரஸ் தலைமை சொல்லியிருக்கிறது.. இவர்கள் என்ன ராகுலை விடவும், கார்கேவை விடவும் பெரிய ஆளா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனாலும் மாணிக்கம் தாகூர் அமைதியாக இருக்கவில்லை.

தொடர்ந்து அதே கருத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் இன்று சென்னை வந்தார். விரைவில் ஸ்டாலினும் அவரும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. ஒருபக்கம் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூட்டணி பற்றி பேசுவோம் என திமுக தரப்பு சொல்லியிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்