சினிமா

ரூ.300 கோடி வசூல் செய்த ‘கேரளா ஸ்டோரி’ முதல் பாகம்.. ஆனால் இரண்டாம் பாகம்?

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா சர்மா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ‘தி கேரளா ஸ்டோரி – 2’ திரைப்படம், தியேட்டர்களில் போதிய வரவேற்பு கிடைக்காமல் பாக்ஸ் ஆபீஸில் திணறி வருகிறது.

2023-ல் வெளியான இதன் முதல் பாகம் பலத்த சர்ச்சைகளையும் அதே சமயம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலையும் குவித்து சாதனை படைத்தது. இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகம் அந்த மேஜிக்கை நிகழ்த்தவில்லை.

திரையிடப்பட்ட முதல் சில நாட்களிலேயே பல திரையரங்குகளில் போதிய கூட்டமில்லாத காரணத்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல் பாகத்தை போலத் தற்போதைய கதைக்களம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சமூக வலைதளங்களில் படத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து விவாதங்கள் நடந்தாலும், அது வசூலாக மாறவில்லை. ஏற்கனவே ஹாலிவுட் மற்றும் தென்னிந்தியப் படங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி – 2’ ஒரு படுதோல்வி திரைப்படமாக மூவியாக மாறியுள்ளது. போதிய புரமோஷன் இல்லாததும், கதையில் புதுமை இல்லாததும் இந்தப் பின்னடைவுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்