இந்தியா

ஒன்று இரண்டல்ல, எனக்கு 5000 காதலிகள் உள்ளனர்..அமைச்சரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு..!

கேரள போக்குவரத்து அமைச்சரும் நடிகருமான கே.பி. கணேஷ் குமார், திருமணத்திற்கு புறம்பான உறவு மற்றும் மனைவியை தாக்கியதாக எழுந்த புகார்களால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவரது மனைவி பிந்து மேனன், கணவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், “எனக்கு ஒருவர் அல்ல, 5,000 காதலிகள் உள்ளனர்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். பலர் தன்னை நேசிப்பதாகவும், தான் பலரை நேசிப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

எதிர்க்கட்சிகள் அவரது ராஜினாமாவை வலியுறுத்தி வந்த நிலையில், இந்த கதையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணேஷ் குமார் தனது தவறை ஒப்புக்கொண்டு கண்ணீருடன் மன்னிப்பு கேட்டதால், புகாரை திரும்பப் பெறுவதாக பிந்து மேனன் அறிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டிலும் தனது முதல் மனைவி அளித்த புகாரால் கணேஷ் குமார் அமைச்சர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்