அணு ஆயுதம் வைத்திருப்பது தொடர்பாக ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி முடிந்ததால் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து அந்நாட்டின் மீது கடந்த பல நாட்களாகவே தாக்குதல் நடத்தி வருகிறது.. அதில் இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
எனவே அவரின் மரணத்திற்கு பழிவாங்குவோம்.. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை கொல்வோம் என ஈரான் அறிவித்தது.. ஒருபக்கம் கடந்த சில நாட்களாகவே நெதன்யாகு தொடர்பான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. அவர் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ எதுவும் வெளியாகவில்லை.. இதையடுத்து நெதன்யாகு போரில் இறந்து விட்டார் என செய்தி பரவியது.
அதை நிரூபிப்பது போல நெதன்யாகுவை கொண்றுவிட்டோம் என சொல்லி ஆறு விரல் கொண்ட அவரின் கைக அடங்கிய புகைப்படத்தை ஈரானில் சிலர் வெளியிட்டனர். ஒருபக்கம் நெதன்யாகு உயிரோடு இருந்தால் அவரை கொல்வோம் என ஈரான் புரட்சிப்படை அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்நிலையில்தான் நெதன்யாகு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.. இஸ்ரேலில் உள்ள ஒரு காபி ஷாப்பில் காபி குடிக்கும் எனக்கு ஐந்து விரல்கள்தான் என சொல்லி அவரின் கைகளையும் காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

