சினிமா

திரையுலகில் தடம் பதிக்கும் பிரபுதேவாவின் மகன்: வைரலாகும் முதல் முதலாய் ஆல்பம்

இந்தியத் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா, ‘முதல் முதலாய்’ என்ற மியூசிக் வீடியோ ஆல்பத்தின் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கியுள்ளார். தந்தையின் வழியைப் பின்பற்றி, இந்த ஆல்பத்தில் தனது சிறப்பான நடனத் திறமையையும் நடிப்பாற்றலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆல்பத்தில் ரிஷி தேவாவுடன் நடிகை கைரா இப்பாடலில் நடனமாடி நடித்துள்ளார். ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலுக்கு இசையமைத்து, பாடலை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்த பாடலைப் பாடியுள்ளார். இப்பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்கியுள்ளார். ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, நடன அமைப்பை சுரேன் மேற்கொண்டுள்ளார். ரிஷி தேவா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த ‘முதல் முதலாய்’ வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, நடனக் காட்சிகளில் ரிஷி தேவா அச்சு அசலாக தனது தந்தை பிரபுதேவாவைப் போலவே அசத்தியிருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்