விளையாட்டு

கேப்டனையே வெளியே போக சொன்ன சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்.. அணிக்குள் பிரச்சனையா?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இஷான் கிஷன், பயிற்சி போட்டியின் போது சக வீரர் ஜீஷன் அன்சாரியால் ஆக்ரோஷமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயம் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள பேட் கம்மின்ஸிற்கு பதிலாக கிஷன் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது, ஜீஷன் வீசிய ஓவரில் இஷான் கிஷன் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர்களை விளாசினார்.

இருப்பினும், அடுத்த பந்திலேயே கிஷனை வீழ்த்திய லெக் ஸ்பின்னர் ஜீஷன், அவரை பெவிலியன் நோக்கி செல்லுமாறு கைகளால் சைகை காட்டி ஆக்ரோஷமாக வழிப்படை அனுப்பினார் . கேப்டன் என்றும் பாராமல் சக வீரர் இவ்வாறு நடந்துகொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இஷான் கிஷன் இதனை ஒரு புன்னகையுடன் கடந்து சென்றார். இந்த சம்பவம் அணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பினாலும், கிஷனின் நிதானமான அணுகுமுறை அனைவராலும் பாராட்டப்படுகிறது. அபிஷேக் சர்மா தற்போது அணியின் துணை கேப்டனாக செயல்படுகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்