தமிழ் சினிமாவில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருபவர் ஜெயம் ரவி. சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரவி அவருக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிவதாக அறிவித்தார். மனைவி ஆர்த்தி தன்னை கட்டுப்படுத்தியதாகவும், தன் மீது சந்தேகப்பட்டதாகவும், தன்னுடைய செலவுக்கான பணத்தை கூட கொடுக்காமல் தன்னை சித்திரவதை செய்ததாகவும், ஆர்த்தியின் அம்மா சுஜாதா தன்னை வைத்து படங்களையெடுத்து நஷ்ட ஈடு காட்டி தன்னை ஏமாற்றியதாகவும் பல புகார்களை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஒருபக்கம் கோவாவை சேர்ந்த கெனிஷா என்பவரோடு ரவி மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆர்த்தியுடன் விவாகரத்து என அறிவித்தபின் சினிமா தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கெனிஷாவோடு கலந்து கொண்டார் ரவி மோகன். எனவே, விவாகரத்துக்கு பின் கெனிஷாவை அவர் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான், தற்போது ஒரு சர்ச்சையில் ரவி மோகன் சிக்கியிருக்கிறார். கெனிஷாவுடன் இணைந்து கோவாவில் 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை வாங்கி இருக்கிறார் ரவி மோகன். நிலம் ரிஜெஸ்டர் செய்யப்பட்ட ஆவணத்தில் ரவியின் தனிப்பட்ட விவரங்களை குறிப்பிடும் இடத்தில் தனக்கு திருமணமாகவில்லை என குறிப்பிட்டிருக்கிறார்.
ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறாத நிலையில் தனக்கு திருமணமாகவில்லை என ரவி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

