சினிமா

புரோட்டோ சூரி இப்போ வேற ரேஞ்ச்!.. சம்பளத்தை கேட்டு தெறிச்சி ஓடும் தயாரிப்பாளர்கள்!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. மதுரையை சேர்ந்த சூரி பெரும்பாலான படங்களில் கிராமத்து கதைகளில் காமெடியனாக நடித்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் இவரின் முக்கிய காமெடி நடிகராக மாற்றியது. அஜித், விஜய், சூர்யா என பலரின் படங்களிலும் காமெடியனாக நடித்தார்.

வெற்றிமாறன் விடுதலை திரைப்படம் மூலம் சூரியை கதாநாயகனாக மாற்றினார். அந்த படம் வெற்றியடையவே தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே சூரி நடித்து வருகிறார். அப்படி அவரின் நடிப்பில் வெளியான விடுதலை 2, கருடன், மாமன் மகள் போன்ற படங்கள் வெற்றியை பெற்றது.

இந்நிலையில்தான், சூரி தனது சம்பளத்தை தடாலென உயர்த்திவிட்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கவுள்ள புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்க சூரி 25 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் இந்த சம்பளத்தை கொடுக்க முன் வந்திருக்கிறது. ஆனால் கோலிவுட்டில் உள்ள மற்ற இயக்குனர்கள் சூரியின் சம்பளத்தை கேட்டு தெறித்து ஓடுகிறார்களாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்