உலகம்

சொந்த நாட்டு மக்களை தாக்கிய விமானப்படை!.. நைஜீரியாவில் அப்பாவி மக்கள் 100 பேர் பலி!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக அந்நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நைஜீரியாவில் உள்ள யோபோ மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.. யோபோ மகாணத்துக்கு அருகேயுள்ள போர்னோ மாகாணம் கடந்த பல வருடங்களாகவே ஜிகாதி கிளர்ச்சியின் மையமாக செயல்பட்டு வருகிறது.. எனவே அந்த இடத்தில் தாக்குதல் நடத்த நைஜீரியா விமானப்படை முடிவெடுத்தது.

ஆனால் யோபோவில் உள்ள ஜிலி கிராமத்தில் வாரச்சந்தை நடைபெற்ற போது ஜிகாதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குகிறோம் என நினைத்து தவறுதலாக பொதுமக்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது.. இதில் அப்பாவி பொதுமக்கள் 100 பேர் வரை உயிரிழந்தனர்.. பலரும் காயமடைந்தனர் எனவே பலி எண்ணிக்கை உயிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த சம்பவம் நைஜீரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த