விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் எல்.ஐ.கே.
இந்த படம் உருவாகி பல மாதங்கள் வெளியாகாமல் இருந்தது.. பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாக சென்றதால் ஒரு கட்டத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் படத்தை விக்னேஷ் சிவனிடமே ஒப்படைத்து விட்டதாகவெல்லாம் செய்திகள் வெளியானது. 2046-ல் கதை நடப்பது போல எல்.ஐ.கே படத்தை உருவாக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.. மாறிவரும் காலத்திற்கு கதையை உருவாக்கி இருக்கிறார்.
நல்ல கதை என்றாலும் படத்தின் திரைக்கதை சரியில்லை.. குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதி சரியாக அமைக்கப்படவில்லை என பொதுவான விமர்சனங்கள் எழுந்தது. அதேநேரம் இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் உலகமெங்கும் சேர்த்து 35 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 26.29 கோடியும், வெளிநாடுகளில் 8.30 கோடியும் இப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஒரு வாரம் மட்டும் இந்த படம் நல்ல வசூலை பெற்றால் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கும் எனக்கு கணிக்கப்படுகிறது.

