போர்த்தொழில் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் விக்னேஷ் ராஜா. இந்த திரைப்படத்திற்கு பின் அவர் தனுஷை வைத்து கர என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமார், கருணாஸ், மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். திரில்லர் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.. இந்த படத்தில் வங்கியில் கொள்ளையடிக்கும் நபராக தனுஷ் நடித்திருக்கிறார்.. அவர் ஏன் இதை செய்கிறார் என்ற காரணம் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது..
நேற்று மாலை கர படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது, இந்த விழாவில் பேசிய கர படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா ‘தனுஷ் சாரிடம் பணிபுரிவது ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் படிப்பது போல இருந்தது.. தனுஷ் சாரின் டீம் ஒவ்வொன்றையும் மிகுந்த கவனத்துடன் செய்தார்கள்.. படம் பார்த்த பிறகு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. ஆனால் கதையையோ அல்லது இடைவேளை காட்சிகளையோ யாரும் வெளியே சொல்ல வேண்டாம்.
படம் பார்க்க செல்பவர்கள் தியேட்டருக்கு சரியான நேரத்திற்கு செல்லுங்கள்.. ஏனெனில் முதல் காட்சியிலிருந்தே படம் துவங்கிவிடும். முதல் ஐந்து நிமிடங்கள் தாமதமானால் சில விஷயங்கள் புரியாது.. பத்து நிமிடங்கள் தாமதம் செய்தால் பல விஷயங்கள் புரியாது’ என கூறியிருக்கிறார்.

