விளையாட்டு

244 ரன்கள் டார்கெட் கொடுத்தாலும் SRHக்கு பத்தாது.. பரிதாபமாக தோல்வி அடைந்த MI..!

வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த விறுவிறுப்பான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிரடியாக துரத்திப் பிடித்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, இந்த சீசனில் தனது ஆறாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, ரியான் ரிக்கெல்டனின் அதிரடி சதத்தின்உதவியுடன் 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது. வில் ஜாக்ஸ் 46 ரன்கள் எடுத்தார்.

244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பயணித்த ஐதராபாத் அணிக்கு, அபிஷேக் சர்மா (24 பந்துகளில் 45) மற்றும் டிராவிஸ் ஹெட் (30 பந்துகளில் 76) ஆகியோர் அதிரடி துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 129 ரன்கள் சேர்த்தனர்.

இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் சற்றே தொய்வு ஏற்பட்டது. அப்போது களம் புகுந்த ஹென்ரிச் கிளாசென், நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்கு ஆதரவாக இளம் வீரர் சலில் அரோரா 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி, வான்கடே மைதானத்தின் அதிகபட்ச சேஸிங் சாதனையை படைத்தது.

மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காமல் ஏமாற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்