விளையாட்டு

குஜராத் அணி சிறப்பாக பந்து வீசினாங்க… தோல்விக்கு பிறகு பேட் கம்மின்ஸ்

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த 56-ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமான பந்துவீச்சு மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை சேர்த்தது.

இதைத் தொடர்ந்து 169 எனும் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெறும் 86 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இது அந்த அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராக பதிவானது. குஜராத் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், “ஆடுகளம் மிகவும் கடினமானதாகத் தெரிந்தது. குஜராத் அணியினரிடம் இருந்து ஒரு சிறப்பான பந்துவீச்சு முயற்சியாக அமைந்தது. எங்கள் அணியின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்துள்ளது. அவர்கள் (பேட்ஸ்மேன்கள்) 400-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளனர். நாங்கள் 5 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதாக நான் கருதுகிறேன்; இந்த வெற்றிகள் எங்களுக்கு சற்று நிம்மதியை அளிக்கின்றன,” என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்