சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர், பத்திரிக்கையாளர் என மக்களால் அறியப்பட்டவர் சவுக்கு சங்கர். சவுக்கு ஆன்லைன் என்கிற இணையதளத்தில் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் பற்றியும் அரசியல் கட்சிகள் செய்யும் முறைகேடுகள் பற்றியும் தொடர்ந்து எழுதி வந்தார்.
மேலும் டிவிட்டரில் ஆளுங்கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் சவுக்கு சந்தர். கடந்த ஐந்து வருடங்களில் திமுகவுக்கு எதிராக இவர் பல கருத்துக்களையும் கூறினார். திமுக அமைச்சர்கள் செய்ததாக சொல்லி பல ஊழல்களையும் ஆதாரங்களோடு வெளியிட்டார்.
இதையடுத்து திமுகவின் ஆதரவாளராக பார்க்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் காவல் ஆணையருருமான அருண் ஐபிஎஸ் சவுக்கு சங்கரை சிறையில் அடைத்து அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார். சில நாட்களுக்கு முன்பு கூட உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சவுக்கு சங்கர். ஒரு பக்கம் சவுக்கு சங்கரின் தாயும் சமீபத்தில் இறந்து போனார்.. அதோடு, சவுக்கு மீடியாவில் வேலை செய்த இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது திமுக.
தற்போது, திமுக ஆட்சி முடிந்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. குண்டர் சட்ட நடவடிக்கைக்கான புதிய காரணங்கள் இல்லை என அறிவுரைக் கழகம் கூறியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு சவுக்கு சங்கர் உட்பட பலரின் மீதும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி யும், சட்டத்தை மீறியும் அருண் ஐபிஎஸ் குண்டர் சட்டம் போட்டதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

