தமிழக அரசியல் வரலாற்றில், முந்தைய திமுக ஆட்சி காலங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் சினிமா மோகத்திற்காக ஒட்டுமொத்த திரைத்துறையையும் தங்களின் ஏதேச்சதிகார கட்டுப்பாட்டில் வைத்திருந்த அராஜக போக்கு அனைவருக்கும் தெரிந்ததே. விநியோக உரிமை, திரையரங்கு ஒதுக்கீடு என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, சினிமாவை மிரட்டி வந்த ஒரு கூட்டத்தினரின் ஆட்சி வீழ்ந்ததை திரைத்துறையினர் தற்போது நிம்மதியுடன் கொண்டாடி வருகின்றனர்.
அண்மையில் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, திரையரங்கு உரிமையாளர் ஒருவர் மகிழ்ச்சியுடன், “இனி என் தியேட்டரில் என்ன படம் போட வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன்” என்று தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது, கடந்த கால திராவிட ஆட்சியில் நிலவிய அடக்குமுறையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
2006-11 மற்றும் 2021-26 ஆகிய இருமுறை திமுக ஆட்சியை இழந்ததற்கு குடும்பத்தினரின் சினிமா ஆதிக்கமும், திரையுலகினருக்கு செய்த அராஜகங்களுமே மிக முக்கிய காரணங்களாக அமைந்தன. ‘முதல்வராக யார் வந்தாலும் சினிமாவை தங்களின் கட்டுப்பாட்டில்தான் வைப்பார்கள்’ என்ற திமுகவினரின் முட்டாள் தனமான வாதங்களுக்கு புதிய தவெக அரசு தனது செயல்பாடுகள் மூலம் முற்றுப்புள்ளி வைக்கவுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் அமையப்பெற்றுள்ள தவெக ஆட்சியில் அத்தகைய அராஜகங்கள் ஒருபோதும் நடக்காது. சினிமாவை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், சிறிய தயாரிப்பாளர்கள் முதல் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் வரை ஒட்டுமொத்த திரையுலகினரும் சமமாகப் பயன்பெறும் வகையில், சினிமா சார்ந்த பல புதிய மாபெரும் நலத்திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வமான மற்றும் சாதகமான அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகி திரைத்துறையினருக்குப்புதிய விடியலை தரும் என்பது முற்றிலும் உறுதியாகும்.

