விளையாட்டு

சியர் லீடர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ரசிகர்கள்.. பாய்ந்த பெண் போலீசார்! லக்னோவில் பரபரப்பு

லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது சியர்லீடர்களிடம் சில ரசிகர்கள் அத்துமீற முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வந்த பின், உடனடியாக பெண் போலீசார் பலரும் அங்கு அனுப்பப்பட்டு ரசிகர்களை பிடித்து எச்சரிக்கை வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை இரவு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான லீக் ஆட்டம் நடைபெற்றது. பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கிறது.

இந்தப் போட்டியின் போது மைதானத்தில் அரங்கேறிய ஒரு விபரீத சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் போது, மைதானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்த ரசிகர்கள் சிலர், அங்கிருந்த சியர் லீடர்களிடம் தொடர்ந்து அநாகரீகமாக நடந்துகொண்டு, அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சியர் லீடர்களுக்கு தொல்லை கொடுத்த ரசிகர்களின் அத்துமீறல் எல்லை மீறியதை அடுத்து, மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த லக்னோ காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்தனர். குறிப்பாக, பெண் போலீசார் அந்த ரசிகர்களைச் சூழ்ந்துகொண்டு, அவர்களைக் கடுமையாக எச்சரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சியர் லீடர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர்களைப் பெண் போலீசார் பிடித்து விசாரிக்கும் காட்சிகளும், அவர்களை எச்சரிக்கும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகின்றன. ஐபிஎல் போட்டிகளின் போது சியர் லீடர்கள் மற்றும் பெண் ரசிகர்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவது இது முதல் முறையல்ல.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்