சினிமா

பிரச்சனைனா வரதில்ல!.. கார்ல உட்கார்ந்து அழுறாங்க.. திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி!

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கருப்பு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதையயடுத்து இந்த படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகிய மூவருக்கும் 30 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை சூர்யா பரிசாக கொடுத்தார்.

அதேநேரம் படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜிக்கு சூர்யா எந்த பரிசும் கொடுக்கவில்லை. அதற்கு காரணம் இந்த படம் உருவாகும்போது ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர் பிரபுவுடன் போட்ட சண்டைதான். இந்த பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பலமுறை தள்ளி வைக்கப்பட்டு பல நாட்கள் நடந்தது. இதனால் ஆர்.ஜே பாலாஜி மீது சூர்யா அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது..

படம் கடந்த மே 14ம் தேதி ரிலீஸ் என அறிவித்தார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கு இருந்த கடன் பிரச்சனையால் இந்த படம் வெளியாகவில்லை. அப்போது சூர்யாதான் தலையிட்டு படம் வெளிவர உதவி செய்தார். இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி காரில் அமர்ந்து அழுதபடி வீடியோவும் போட்டிருந்தார். ஆர்.ஜே பாலாஜி பட ரிலீஸுக்கு முன்பு தனது சம்பளத்தை தயாரிப்பாளரிடம் காராக வாங்கிக் கொண்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளிடம் பேசிய விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ‘எந்த ஒரு பெரிய படமும் திட்டமிட்டபடி முடிப்பது கிடையாது. உதாரணத்திற்கு கருப்பு திரைப்படம் கடந்த தீபாவளிக்கே வரவேண்டியது.. ஆனால் சுமார் எட்டு மாதங்கள் தள்ளிதான் வெளியானது.. படம் வெளியாவதற்கு முந்தைய இரண்டு நாட்கள் தயாரிப்பாளர் பட்ட கஷ்டங்கள் எங்களுக்கு மட்டுமே தெரியும். படம் ரிலீஸாகும் போது சிக்கல் ஏற்பட்டால் நடிகரோ, தொழில்நுட்ப கலைஞரோ உதவிக்கு வருவதில்லை.

நடிகர் சூர்யா மட்டுமே வந்தார். படத்திற்கு சிக்கல் வரும்போது காரில் உட்கார்ந்து கொண்டு அழும் இயக்குனர் படம் ரிலீஸாகி நல்லபடியாக ஓடியவுடன் நான்தான் வெற்றிக்கு காரணம் என்று காலரை தூக்கிக்கொண்டு பெருமை பேசுகிறார்கள்’ என சொல்லியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்