உலகம்

ஹார்மூஸ் நீரிணைய கடக்க கட்டணம்!.. ஈரான் போடும் மெகா ஸ்கெட்ச்!..

ஈரான், சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, பெஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுவரும் கப்பல்கள் ஈரானின் ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் செல்கிறது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாகவே ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரெலும் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.

இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வருவது தடைபட்டதால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒருபக்கம், ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவிருக்கிறது.

இந்நிலையில்தான், இனி வரும் காலங்களில் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு சேவை கட்டணத்தை விதிக்க ஈரான் அரசு முடிவு செய்திருக்கிறது. ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம், சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி சுங்க கட்டணமாக பணம் வசூலிக்க முடியாது என்பதால் சேவை கட்டணமாக இந்த தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகில் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் ஹார்மூஸ் நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது. எனவே, ஈரானின் இந்த முடிவு சர்வதேச எரிசக்தி சந்தையில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த