2023ம் வருடம் பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1200 பேர் பலியானார்கள். மேலும் 250 பேரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து அந்த நாட்டின் மீது இஸ்ரேல் போரை துவங்கியது.
கடந்த மூன்று வருடங்களாக காசா மற்றும் பாலஸ்தீன நகரங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 73 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்து விட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். ஒருபக்கம் 1,73,200 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..
போர் காரணமாக காசாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது., மக்கள் அன்றாட உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலை வந்திருக்கிறது. இந்நிலையில்தான் இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என பாலஸ்தீனம் கோரிக்கையை வைத்திருக்கிறது. அவர்கள் வெளியிட்டுள்ள உருக்கமான கோரிக்கையில் ‘இந்தியாவும் இந்திய மக்களாலும் உதவ முடியாவிட்டால் வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்?.. காசாவின் மேற்கு கரையில் முற்றிலும் சீர்குலையும் நிலையில் உள்ள சுகாதாரத் துறையை காப்பாற்ற இந்தியாவில் ஆரோக்யா மைத்ரி திட்டத்தின் கீழ் அவசரமாக 100 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்க வேண்டும்’ என பாலஸ்தீனம் கோரிக்கை வைத்திருக்கிறது.

