தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஜூன் 26ம் தேதியான நாளை என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என பார்ப்போம் வாருங்கள்;
ரொமான்டிக் திரைப்படமாக உருவாகியுள்ள ஹார்ட்டின் படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தை கிஷோர் இயக்கியிருக்கிறார். சனந்த், மடானா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரு காதல் ஜோடி தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினையை இந்த படம் பேசுகிறது..
குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமான அர்ஜுன்தாஸ் ஒரு பக்கம் ஹீரோவாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்றுதான் கான் சிட்டி. இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை ஹரீஷ் துரைராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஒரு சிறுவன் கடத்தப்பட அவர்களை மீட்க இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது..
அதேபோல், அனந்தன் காடு என்கிற திரைப்படம் நாளை தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தில் ஆர்யா மற்றும் முரளி கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணகுமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
மேலும், அங்கீகாரம் என்கிற திரைப்படமும் நாளை வெளியாகியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை தேன் பாதியன் என்பவர் இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

