திரைக்கதை மன்னன், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்த கே.பாக்யராஜ் மரணமடைந்தது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த அதிகாலை நடை பயிற்சி சென்று வீட்டுக்கு வந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது/ இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். பாரதிராஜாவின் சிஷ்யர்களில் முக்கியமானவர் கே.பாக்யராஜ். பார்த்திபன், பாண்டியராஜ் போன்ற பல இயக்குனர்களை உருவாக்கியவர்..
சினிமாவில் ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்தை உடைத்தவர் கே.பாக்யராஜ். சோடாபுட்டி கண்ணாடி, திருட்டு முழி என்று ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக பெண்களுக்கு பிடித்தமான பல திரைப்படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார்.
ரஜினி, கமல், முதலமைச்சர் விஜய், பிரசாந்த், பிரபு, விக்ரம் பிரபு, தனுஷ் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். முதலமைச்சர் விஜய் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்திருக்கிறா. பாக்யராஜின் குரு பாரதிராஜா கடந்த 10ம் தேதி மரணமடைந்த நிலையில் 17வது நாளில் அவரது சிஷ்யனும் மரணமடைந்திருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு முக்கிய இயக்குனர்கள் மரணமடைந்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

