உலகம்

தினமும் வீணாகும் 10 பவுன் தங்கம்!.. அண்டார்டிகாவில் நடப்பது என்ன?..

உலகெங்கும் உள்ள மக்களால் தங்கம் என்பது ஒரு ஆபரண பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் வாங்கி சேர்க்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. ஒரு பக்கம் அதை வர்த்தகத்திற்கு பலரும் பயன்படுத்தினாலும் பொது மக்களை பொருத்தவரை தங்க நகையை அணிவதை பெண்கள் பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறார்கள். பல நாடுகளில் டாலரின் மதிப்பு கூட அந்த நாட்டில் உள்ள தங்கத்தை அடுப்படையாக கொண்டு கணிக்கப்படுவதாக சொல்லப்படுவதுண்டு.

தமிழகத்தில் தற்போது இன்றைய நிலவரப்படி ஒரு பவுன் தங்கம் 1,05,600 எனவும், ஒரு கிராம் 13,200 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பல நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் நீடித்துவருகிறது.

இந்நிலையில்தான், அண்டார்டிகாவின் உள்ள மவுண்ட் எரேபஸ் (Molunt Erebus) என்கிற எரிமலை நாள்தோறும் சுமார் 10 பவுன் தங்கத்தை காற்றில் கக்குகிறது. இதன் மதிப்பு ஆண்டுக்கு தோராயமாக 18.9 கோடி என சொல்லப்படுகிறது. இந்த தங்க துகள்கள் எரிமலையிலிருந்து 1000 கிலோ மீட்டர் தூரம் வரை பரவி அண்டார்டிகா பனிப்பாறைகளில் படிவதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த