நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண் ராஜ் இன்று மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு வழிகாட்டுதலின்படி எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதோ அதை மட்டுமே தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்க வேண்டும்.. அதேபோல் நான்கரை வருடங்களுக்கான கட்டணங்களை மட்டுமே மாணவ, மாணவர்களிடமிருந்து கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும்..
ஆனால் சில நிர்வாகங்கள் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன.. அப்படி புகார் வரும் பட்சத்தில் அதை விசாரிப்பதற்கு தனி குழு அமைத்து மருத்துவக் கல்லூரிகளில் விசாரணை நடத்தப்படும். மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.
எனவே விதிகளுக்கு புறம்பாக அதிக கட்டணத்தை தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்..

