கனடா

மூளைப் புற்றுநோய் பரவலைத் தடுக்கும் புதிய மருத்துவக் கண்டுபிடிப்பு

கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மூளைப் புற்றுநோய் பரவலைத் தடுப்பதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளனர். டாக்டர் ஷீலா சிங் தலைமையிலான குழுவினர், புற்றுநோய் செல்கள் மூளைக்கு பரவ முக்கிய காரணமாக இருக்கும் IMPDH2 எனும் நொதியைச் செயலிழக்கச் செய்யும் புதிய மருந்துகளைக் கண்டறிந்துள்ளனர். தற்போதுள்ள மருத்துவ முறையில், மூளைக்கு பரவிய புற்றுநோயைக் குணப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.

அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க முறைகள் ஆரோக்கியமான செல்களைப் பாதிப்பதோடு, நோயாளிகளுக்குக் கடும் உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இந்த புதிய மருந்து புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்துத் தாக்குவதால் பக்கவிளைவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேக்கப் மகோலன் தலைமையிலான குழுவினர் சுமார் 700 மருந்து மூலக்கூறுகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையில் இருந்தாலும், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் இது பயன்பாட்டிற்கு வரும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதன் மூலம் மூளைப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பெருமளவு தடுக்க முடியும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு