சினிமா

ஜனநாயகனுடன் மோதுகிறாரா சூர்யா?!. விஜய் ஃபேன்ஸ் வச்சு செய்வாங்களே!..

விஜய் ரசிகர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. விஜய் பற்றி ஒருவர் விமர்சித்தாலே அவரை ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தளங்களில் வச்சி செய்துவிடுவார்கள். அதேபோல் விஜய் படத்துக்கு போட்டியாக தனது படத்தை ஒரு நடிகர் வெளியிட்டால் அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள்.

ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா கழுகு கதை சொன்னதால் விஜய் ரசிகர்களின் எதிரியாக ரஜினி மாறினார். இதையடுத்து ரஜினியின் வேட்டையன் படம் வெளியான போது முதல் காட்சி வெளியாவதற்கு முன்பு அந்த படம் தோல்வி என விஜய் ரசிகர்கள் பதிவிட்டனர். அதேபோல் ன் கங்குவா படம் ரிலீஸின் போதும் விஜய் ரசிகர்கள் களமாடினார்கள். பராசக்தி படம் வெளியான போதும் இதுதான் நடந்தது.

இந்நிலையில்தான், ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23ம் தேதி அல்லது ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்து விட்டார்கள்.

ஒருவேளை அந்த தேதியில் ஜனநாயகன் படமும் வெளியானால் இரண்டு படங்களும் மோத வாய்ப்பிருக்கிறது. கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.. சூர்யாவை திட்டுவதோடு விஸ்வநாத & சன்ஸ் படத்துக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களையும் பரப்புவார்கள்.

கருப்பு படம் சூப்பர் ஹிட் ஆனதால் சூர்யா துணிந்து ஜனநாயகன் படத்தோடு போட்டி போடுவாரா இல்லை விஸ்வநாத & சன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்