திருமண நிகழ்வுகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நடனமாடுவது என்பது சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல திருமண விழாக்களில் மணமகனும், மணமகலும் இணைந்து நடனமாடுகிறார்கள். இது தொடர்பான பல வீடியோக்களை நாம் சமூகவலைத்தளங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது நடனம் காரணமாக ஒரு திருமணமே நின்று போன சம்பவம் ஆந்திராவில் நடந்திருக்கிறது..
ஆந்திரா மாநிலம் மார்க்கபுரம் மாவட்டத்தில் உள்ள ரச்சார்லா என்கிற ஒரு ஊரில் ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபருகுக்ம், துரிமெல்லா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.. திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை இரவு மணமகன் மற்றும் மணப்பெண் அழைப்பு நடைபெற்றது. எனவே மணமகன், மணமகள் இருவரையும் ஒரு வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக குடும்ப உறுப்பினர்கள் அழைத்து சென்றனர். அப்போது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் சிலர் அந்த ஊர்வலத்தில் நடனமாடியதாக சொல்லப்படுகிறது..
அதோட நடனாட வருமாறு அவர்கள் மணமகன், மணமகனை அழைத்திருக்கிறார்கள். இதற்கு மணமகள் சம்மதித்த நிலையில் மணமகன்ம் சம்மதிக்கவில்லை. நான் நடனமாட வரமாட்டேன் என்று சொன்னதோடு மணப்பெண்ணிடம் அவர் கடிந்து கொண்டார். இதைப்பார்த்து கோபமடைந்த மணமகளின் தந்தை உடனே தனது மகளை அந்த வாகனத்திலிருந்து கீழே இறக்கி ‘எங்களுக்கு இந்த திருமணம் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தன் மகளை கூட்டி சென்றார்..
எனவே, மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் திருமணம் நடத்தப்பட்டது. இப்போதே என் மகளிடம் மணமகன் இப்படி நடந்து கொள்கிறார் என்றால் திருமணத்திற்கு பின் எப்படி நடந்துகொள்வார்?.. எனக்கு என் மகளின் சந்தோஷமும், சுதந்திரமும் முக்கியம் எனக்கூறி மணமகளின் தந்தை திருமணத்தை நிறுத்திவிட்டார்.

