இந்தியா

கரூர் நெரிசல் வழக்கு!.. திமுகவுக்கு மூக்குடைப்பு!.. உச்சநீதிமன்றம் கண்டிப்பு…

முதலமைச்சர் விஜய் வருகிற 10ம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவிருக்கிறார். அப்போது உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலைகள் ஆகியவற்றை அவர் அறிவிப்பார் என தெரிகிறது. மேலும் அந்த நிகழ்வின்போது கரூரில் என்ன நடந்தது என விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமர் போன்ற அமைச்சர்கள் பேச வாய்ப்பிருக்கிறது.

அப்படி பேசினால் அது தங்களுக்கு அது பின்னடைவாக அமையும் என திமுக கருதுகிறது. எனவே, கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என் ஆனந்த், சிடி நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுவெளியில் பேசக்கூடாது என நேற்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

ஆனால் இந்த வழக்கை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார். ‘நீங்கள் பேச்சு சுதந்திரத்திற்கு தடை கேட்கிறீர்களா?.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் போது நாங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என நீதிபதி திமுக தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் ‘கரூரில் மக்களை சந்திப்பது என்பது முதல்வரின் முடிவு.. அதை தடுக்க முடியாது.. இந்த வழக்கில் முதல்வர் குற்றவாளி கிடையாது.. நீங்கள் இந்த நீதிமன்றத்தை அரசியல் அரங்கமாக மாற்றாதீர்கள்’ என்று நீதிபதி கண்டித்தார். மேலும் ‘இந்த மனுவை நீங்கள் வலியுறுத்தாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. நாங்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்ய விரும்புகிறோம்’ என நீதிபதி சொல்ல திமுக வழக்கறிஞர் அந்த மனுவை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்