சினிமா

நாகார்ஜுனா குடிக்கும் தண்ணீர் ஒரு லிட்டர் எவ்ளோ தெரியுமா?!

35 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்து வருபவர் நாகார்ஜுனா. தாய் மொழி தெலுங்கில் பல படங்களில் நடித்தாலும் சில நேரடி தமிழ் படங்களிலும் நாகார்ஜுனன் நடித்திருக்கிறார். நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் மகன் நாக சைதன்யாவும் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கிறார்.

ஒருபக்கம் மகன் நடித்துவந்தாலும் இப்போதும் நாகார்ஜுனா பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். நாகார்ஜுனாவிடம் எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கும் விஷயம் அவரிடம் இருக்கும் இளமைதான். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி படத்தில் அவர் தோற்றத்தை பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள்.

இந்நிலையில்தான், நாகார்ஜுனா பற்றிய ஒரு தகவல் வெளியே தெரிய வந்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் நாகார்ஜுனா குடிக்கும் தண்ணீர் பாட்டில் தொடர்பான புகைப்படங்களை சிலர் பகிர்ந்து அது சாதாரண தண்ணீர் அல்ல.. அதன் பெயர் டானிக் வாட்டர்.. அந்த தண்ணீர் ஒரு லிட்டர் விலை ரூ.500 என பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இதனால்தான் அவர் 66 வயதிலும் பிட்டாக இருக்கிறார்’ என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்